கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்முறை இடம்பெறாது



கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற COVID சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

உரிய தரப்பினருடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்க கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

Reactions

Post a Comment

0 Comments