மட்டக்களப்பு - கோப்பாவெளி கிராமத்தினுள் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட காட்டு யானை!



மட்டக்களப்பு - கோப்பாவெளி கிராமத்தினுள் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட காட்டு யானை!

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தினுள் நேற்று முதல் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் அலைந்து சுற்றித் திரிகின்றதை அவதானிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 கோப்பாவெளி பகுதியில் ; மக்கள் வாழும் குடியிருப்பு மற்றும் வயல் பகுதிகளினுள்ளும் நேற்று முதல் தற்போது வரை குறித்த யானையானது அலைந்து திரிகின்றது. குறித்த யானையானது நேய்வாய்ப்பட்டு பரிதாபமாக சுற்றிதிரிவதை தாம் அறியமுடிவதாகவும், எனினும் தாம் அச்சத்தின் மத்தியில் கிராமங்களில் செல்ல வேண்டியுள்ளதாவும் கோப்பாவெளி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
 குறித்த யானைக்கான சிகிச்சையை தொடர்பில் வனவிலங்கு உத்தியோகத்தர்கள் கவணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் மக்கள் இது தெடர்பில் அதிகாரிகள் கவணம் செலுத்த வேண்டும் யானையினை காட்டிற்குள் அனுப்புமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

(செய்திப்பக்கம்)




Reactions

Post a Comment

0 Comments