செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சர்வமத ஆசீர்வாதங்களுடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.


செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சர்வமத ஆசீர்வாதங்களுடன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் புதிய தவிசாளர்  சின்னத்துரை சர்வானந்தன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

இன்று தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார். 

இன்று காலை 9.30 மணியளவில் செங்கலடி பிரதான வீதி சந்தியிலிருந்து புதிய தவிசாளர் க்கு மாலை அணிவித்து கௌரவப்படுத்தி வரவேற்பு ஆரம்பமானது.

குறித்த வரவேற்பு நிகழ்வில் செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் வ.பற்குணன் , சபையின் உப தவிசாளர் இ.ராமச்சந்திரன் உட்பட பிரதேச சபையின் சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு பின் சபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களின் வரவேற்புடனும், சர்வமதத் தலைவர்களின் ஆசியுடனும் தவிசாளர் சின்னத்துரை சர்வானந்தன் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.





















































Reactions

Post a Comment

0 Comments