சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்படவில்லை! வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று பிசீஆர் பரிசோதனை.

கொரோனா அச்சம் காரணமாக மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று பிசீஆர் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை நேற்று பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு மாணவிகளுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருந்தனர். 

அடையாளம் காணப்பட்ட 04 மாணவர்களும் விடுதியிலிருந்து கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்படாத நிலையில். 

இன்று விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களுக்குமாக பிசீஆர் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. 

 பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

Reactions

Post a Comment

0 Comments