வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 04 பேருக்கு கொரோனா


(செங்கலடி நிருபர் சுபா)

 மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 04 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த பெண் மாணவர்களுக்கே இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இன்று விடுதியில் உள்ள மாணவர்கள் 60 பேருக்கு மேற்கொண்ட  அன்டிஜன் பரிசோதனையிலையே 04 மாணவர்களுக்கு  தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

Reactions

Post a Comment

2 Comments