சினிமா துறையை பாதுகாக்கும் வகையில் இரண்டு வருடங்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!
January 12, 2021
சினிமா துறையை பாதுகாக்கும் வகையில் இரண்டு வருடங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சினிமாத்துறை சார்ந்த பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டில் சினிமா கைத்தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
0 Comments