ஐந்தாயிரம் ரூபா போலி நாணயதாளுடன் மூவர் கைது!


ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாளுடன் மூவர் விசேட அதிரடியப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மூன்று பேர் அம்பாறை - ஒலிவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் ; சந்தேக நபர்களிடம் இருந்து போலி ஐந்தாயிரம் ரூபாய் தாள் 10 மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் செங்கலடி, சித்தாண்டி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. 

-செய்திப்பக்கம்

Reactions

Post a Comment

0 Comments