வடகிழக்கு சிவில் அமைப்புகள் எதிர்வரும் 03ஆம் திகதி முதல் 06திகதி வரையில் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
வடகிழக்கில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அவற்றினை சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையிலும் முன்னெடுக்கும் இந்த போராட்டத்திற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் ஒன்றிணையுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
0 Comments