போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 7500 ஏக்கர் விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 7500 ஏக்கர் விவசாய செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

போரதீவுப்பற்று பிரதேசத்தின் பிரதான குளமான நவகிரி குளம் நிரம்பி வான்பாய்ந்த காரணத்தினால் குளத்தின் இரண்டு வான்கதவுகள் சுமார் ஐந்தடி திறக்கப்பட்டது.

இதன்காரணமாக போரதீவுப்பற்றின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேசத்தின் மூன்று கமநல அபிவிருத்தி பிரிவுகளான வெல்லாவெளி,மண்டூர்,பழுகாமம் ஆகிய பகுதிகளில் சுமார் 24ஆயிரம் ஏக்கர் காணிகளில் இம்முறை விவசாய செய்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது விவசாய நிலங்கள் அறுவடைக்கு தயாராகிவரும் நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பெருமளவான விவசாய காணிகள் அழிவடைந்துள்ளன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மண்டூர் கமநல பிரிவில் சுமார் 1500 ஏக்கரும் வெல்லாவெளி பகுதியில் 5000 ஏக்கரும் பழுகாமம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்களும் முழு அளவிலும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் கஸ்டத்தின் மத்தியில் விவசாய செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளின் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அளிந்துள்ளதனால் அரசாங்கம் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















Reactions

Post a Comment

0 Comments