படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்த ராஜனின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் அம்பாரை காரைதீவில் நடைபெற்றது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயளகத்துக்கு அருகாமையில் வைத்து ஊடகவியலாளர் சுகிர்த குமார் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்
திருவண்ணாமலையில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியினை துல்லியமாக வழங்கிய மையினால் அவர் கொல்லப்பட்டார்.
அவரின் 15வது நினைவு தினம் இன்று அம்பாறை ஊடக அமையதின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக அமையம் ஆகியவற்றின் பங்களிப்புடனும் இந்த நிகழ்வு காரைதீவில் நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமைய தலைவர் வா.கிருஸ்னகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளார் ஜெயசிறீல், சிரேஸ்ட ஊடகவியலாளார் BT . சாகாதேவராஜா உட்ப்பட மட்டக்களப்பு அம்பாரை ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்
இதன் போது சிரேஸ்ட ஊடகவியாலாளர் சுகிர்தராஜன் உருவப் படத்துகு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிர் நீர்த்த ஊடகவியலாளர்களுக்காக 2 நிமிடம் மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்து.
அதனை தொடர்ந்து சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் BT. சாகாதேவராஜாவினால் படு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனும் திமிழ் ஊடக துறையின் இன்றய நிலமை தொடர்பிலும் சிறப்புரை வழங்கப்பட்டது.
புதிய ஆட்சியின் கீழ் தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகத்துரையினர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியில் செயற்ப்பட்டு வரும் நிலையில் இன்றய நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 Comments